கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் எச்.டி.எப்.சி. வங்கியின் மூலம் மாவட்டத்தில் உள்ள 430 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வங்கியில் பணியாற்றிய சில அதிகாரிகள், மகளிர் சுய உதவிக் குழுத் தலைவிகளின் கையெழுத்துகளைப் போலியாகப் போட்டு பணம் கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து வங்கியின் பிராந்திய குழுத் தலைவர் அரவிந்தன் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விற்பனை அதிகாரிகள், கடன் அதிகாரி, கடன் மேலாளர், காசாளர் மற்றும் ஆவணப் பதிவாளர் என 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், 23 மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் இருந்து ரூ.1 கோடியே 21 லட்சத்து 61 ஆயிரத்து 685 வசூலித்து, வங்கிக் கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்தது தெரிய வந்தது. இதற்கு மற்ற அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த மோசடியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரித்து வருகின்றனர்.
வங்கியில் ரூ.1.21 கோடி மோசடி - 6 அதிகாரிகள் கைது
கள்ளக்குறிச்சி வங்கியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் ரூ.1.21 கோடி பணத்தை கையாடல் செய்ததாக மேலாளர் உள்பட 6 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் வங்கியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கையெழுத்துகளைப் போலியாகப் பயன்படுத்தி ரூ.1.21 கோடி மோசடி செய்ததாக மேலாளர் உள்ளிட்ட 6 வங்கி அதிகாரிகளை போலீசார் கைது செய்தனர்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




