உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

முயல் வேட்டைக்காக நாட்டு துப்பாக்கியுடன் சென்ற வாலிபர் கைது

முயல் வேட்டைக்காக நாட்டு துப்பாக்கியுடன் சென்ற புதுச்சேரியைச் சேர்ந்த முருகனை, வானூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே போலீசாரைக் கண்டதும் நாட்டு துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டு தப்பியோடிய புதுச்சேரியைச் சேர்ந்த முருகனை, முயல் வேட்டைக்குச் சென்றது தெரியவந்ததையடுத்து போலீசார் கைது செய்தனர்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:
முயல் வேட்டைக்காக நாட்டு துப்பாக்கியுடன் சென்ற வாலிபர் கைது

விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் போலீசார், ரங்கநாதபுரம் சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒருவரை போலீசார் நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால், போலீசாரைக் கண்டதும் அந்த நபர் தனது கையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து போலீசார் துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், துப்பாக்கியைக் கீழே போட்டு விட்டு தப்பிச் சென்றவர் புதுச்சேரி மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பது தெரிய வந்தது. மேலும், அவர் முயல் வேட்டைக்காக நாட்டு துப்பாக்கியுடன் சென்றதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து முருகனை போலீசார் கைது செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50