உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

முன்விரோத தகராறில் தாக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தியாகதுருகம் அருகே முன்விரோதத்தில் தாக்கப்பட்ட 17 வயது சிறுவன் வினோத்குமார், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே முன்விரோதம் காரணமாக தாக்கப்பட்ட வினோத்குமார் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
முன்விரோத தகராறில் தாக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே அசகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், 3-ஆம் தேதி குணசேகரன் மற்றும் அய்யப்பன் மகன் வெங்கடேசன் ஆகியோர் வினோத்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து, வரஞ்சரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து குணசேகரன், வெங்கடேசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று காலை வினோத்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50