உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

நாகர்கோவில் இரயில் பெட்டியில் பெண் சடலம் அழுகிய நிலையில் மீட்பு - வாலிபர் கைது

நாகர்கோவில் இரயில் பெட்டியில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில் இரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரயில் பெட்டியில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில், கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக வாலிபரை கைது செய்தனர்.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
நாகர்கோவில் இரயில் பெட்டியில் பெண் சடலம் அழுகிய நிலையில் மீட்பு - வாலிபர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த பயணிகள் இரயில், பராமரிப்புப் பணிக்காக யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 18-ம் தேதி இரயில் பெட்டியை சுத்தம் செய்த ஊழியர்கள், இருக்கைக்கு அடியில் பெண் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து இரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரைச் சேர்ந்த அய்யப்பன் என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில், பெண்ணை இரயில் பெட்டிக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார், கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் மற்றும் உறவினர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50