இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே தென்கடப்பந்தாங்கல் வி.ஐ.பி. சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவர் தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சென்னையில் ஓட்டுநராக வேலை செய்து வருவதால், கீதா தனது மூத்த மகள் சரண்யா மற்றும் பேரனுடன் வசித்து வந்தார்.இந்நிலையில், கீதா வீட்டில் தனியாக இருந்த போது, அவரது பேரன் மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது கீதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். மேலும், அவர் அணிந்திருந்த 10 சவரன் தங்க நகைகள் மற்றும் பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து சரண்யா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் வெளிநபர்கள் யாரும் வீட்டிற்குள் வரவில்லை என்பது தெரிய வந்தது. பின்னர், சரண்யாவிடம் நடத்திய விசாரணையில், நகைக்காக ஏற்பட்ட தகராறில் தாயைக் கொலை செய்து விட்டு கொள்ளை நாடகமாடியதை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீசார், நகைகளை மீட்கவும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகைக்காக பெற்ற தாயைக் கொன்று கொள்ளை நாடகம் - மகள் கைது
நகைக்காக பெற்ற தாயைக் கொலை செய்துவிட்டு கொள்ளை நாடகமாடிய மகள் சரண்யாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே நகைக்காக பெற்ற தாயைக் கொலை செய்துவிட்டு கொள்ளை நடந்தது போல் நாடகமாடிய மகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




