தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலைய போலீசார் பீச் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த சாக்குப் பையில் 7 கிலோ கஞ்சா, 6 அரிவாள்கள் மற்றும் ஒரு கத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா, ஆயுதங்கள், 3 செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த செல்வசதீஷ், லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிவஞானமூர்த்தி, சிவந்தாகுளம் சாலையைச் சேர்ந்த வினோத் என்பது தெரிய வந்தது. மேலும், இவர்கள் மூவரும் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் 7 கிலோ கஞ்சா, 6 அரிவாள்கள், கத்தியுடன் 3 இளைஞர்கள் கைது
தூத்துக்குடி கடற்கரை சாலையில் 7 கிலோ கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 7 கிலோ கஞ்சா, 6 அரிவாள்கள், ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




