கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம், அடூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ் டேனியல். இவர் தனது மனைவி மரியம்மா ஜோஸ் உடன் கொல்லம் மாவட்டம் சாஸ்தம்கோட்டை அருகே வசித்து வந்தார். இவர்களது மகன் தனது குடும்பத்துடன் திருவனந்தபுரத்தில் வசித்து வந்ததால், வயதான தம்பதியினர் தனியாக இருந்தனர்.பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட ஜோஸ் டேனியல் கடந்த இரண்டு மாதங்களாகப் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இந்நிலையில், உடல்நலம் சரியில்லாத அவரை மனைவி மரியம்மா ஜோஸ் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், செப்டம்பர் 20-ஆம் தேதி ஜோஸ் டேனியலை மனைவி தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களிடம் தெரிவித்தார். ஆனால், அவரது கழுத்தில் இருந்த தடயங்களைக் கவனித்த மருத்துவர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வில் அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த மரியம்மாவைத் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கண்டுபிடித்த கேரள போலீசார் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கணவரைப் பராமரிப்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக இந்தச் செயலில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் நோயால் பாதிக்கப்பட்ட கணவரை கழுத்து நெரித்து கொலை செய்த மனைவி கைது
நோயால் பாதிக்கப்பட்ட கணவரைக் கொலை செய்து தற்கொலை நாடகமாடிய மனைவியை கேரள போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட கணவர் ஜோஸ் டேனியலை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய மனைவி மரியம்மா ஜோஸை போலீசார் கைது செய்தனர். மருத்துவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கொலை அம்பலமானது. தலைமறைவாக இருந்த மரியம்மாவைத் தமிழகத்தின் கும்மிடிப்பூண்டியில் போலீசார் கைது செய்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




