நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி செந்தில் ஆண்டவர் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தற்போது கடையநல்லூர் இல்லத்தார் வடக்குத் தெருவில் வசித்து வருகிறார். இவருக்கும் மாலா என்பவருக்கும் திருமணமாகி நீண்ட காலமாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று கணவன், மனைவி இடையே மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் கோபமடைந்த மணிகண்டன், தனது மனைவி மாலாவின் கையை கடித்து குதறியுள்ளார். இதனால் காயமடைந்த மாலா மீட்கப்பட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மாலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து மனைவியின் கையை கடித்து காயப்படுத்திய மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
குடும்ப தகராறில் மனைவியின் கையை கடித்து குதறிய கணவர் கைது
நெல்லை கடையநல்லூரில் குடும்பத் தகராறில் மனைவியின் கையை கடித்து காயப்படுத்திய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை கடையநல்லூர் பகுதியில் குடும்பத் தகராறில் மனைவி மாலாவின் கையை கணவர் மணிகண்டன் கடித்து காயப்படுத்தினார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாலா அளித்த புகாரின் பேரில் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




