மதுரை மாவட்டம் பரவை மேலரதவீதி குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் பேரூர் நிர்வாகியாக இருந்து வந்தார். மேலும், மினி வேன் ஓட்டுநராகவும் வேலை பார்த்து வந்தார். இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ரைஸ் மில் அதிபரும், வழக்கறிஞருமான செந்தில் குமாரின் மகள் தாரணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. மதுரை பனையூரில் உள்ள சொத்து தொடர்பாக செந்தில் குமார் மற்றும் அவரது சகோதரர்களான கணேஷ்குமார், சிவக்குமார் ஆகியோரிடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதில் சந்தோஷ் தனது மாமனார் செந்தில் குமாருக்கு ஆதரவாக செயல்பட்டதால் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக இருதரப்பினரும் சிலைமான் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ் உள்ளிட்டோரை கைது செய்தனர். பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த சந்தோஷ், நேற்று சிலைமான் போலீஸ் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு வீட்டுக்குத் திரும்பினார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் சந்தோஷை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. இது குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு வீடு திரும்பிய தவெக நிர்வாகி வெட்டிக்கொலை
மதுரையில் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு வீடு திரும்பிய தவெக நிர்வாகி சந்தோஷ் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மதுரை பரவையில் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு வீடு திரும்பிய தவெக நிர்வாகி சந்தோஷை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




