திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று ஆந்திர முதல் சந்திரபாபு நாயுடு மாநில அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார்.
அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பதற்காக திருப்பதி மலைக்கு வந்த முதல்வருக்கு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் நாயுடு, நிர்வாக அதிகாரி எம். ரவிந்திரா ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அங்கிருந்து ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலுக்கு வந்த முதல்வருக்கு தேவஸ்தான தலைமை அர்ச்சகர் பரிவட்டம் கட்டி வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட புதிய பட்டு வஸ்திரத்தை தலை மேல் வைத்தார்.
தொடர்ந்து அங்கிருந்து பட்டு வஸ்திரத்தை சுமந்து சென்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு அரசு சார்பில் சமர்ப்பித்தார்.
இதனை தொடர்ந்து ஏழுமலையானை வழிபட்ட முதல்வருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து வேத பண்டிதர்கள் அவருக்கு வேத ஆசி வழங்கினர்.
தொடர்ந்து தேவஸ்தானம் அச்சிட்டுள்ள 2027 ஆம் ஆண்டு டைரிகள்,காலண்டர்கள் ஆகியவற்றை முதல்வர் வெளியிட்டார்.
ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம்
ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று ஆந்திர முதல் சந்திரபாபு நாயுடு மாநில அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார்.
Visil Administrator
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? . Verified changes are recorded transparently.

