உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் கைது

குமரி மாவட்டத்தில் 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தாயின் கள்ளக்காதலனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தாயின் கள்ளக்காதலன் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:
7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள சிதறால் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரைப் பிரிந்து 7-ம் வகுப்பு படிக்கும் மகளுடன் வசித்து வந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்த போது, அங்கு பணியாற்றிய கோவை குறிச்சிரோடு பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் வேலையை விட்டு விட்டு 3 ஆண்டுகளாக அருமனை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அவர்களுடன் மகளும் வசித்து வந்தார். இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு அஜித்குமார் திடீரென மாயமானார். இதையடுத்து, சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களைக் கவனித்த தாய் விசாரித்த போது, அவர் வீட்டில் இல்லாத நேரங்களில் அஜித்குமார் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், தலைமறைவாக இருந்த அஜித்குமாரை சென்னையில் கைது செய்து மார்த்தாண்டம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50