விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கட்டசின்னம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் தீப்பெட்டி ஆலையின் வெளிமாநிலத் தொழிலாளர்கள் குடியிருப்பில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகத் திருத்தங்கல் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், ஆய்வாளர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட குடியிருப்புப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில், அங்கு சந்தேகத்திற்கிடமாக இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கஸீம் அலி மற்றும் அவரது மனைவி நிலீமா பேகம் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், இருவரும் அசாம் மாநிலத்திலிருந்து ரயில் மூலம் கஞ்சாவைக் கடத்தி வந்து, சிவகாசி பகுதியில் தங்களுடன் பணிபுரியும் சக தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் செல்போனைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, இந்த விற்பனையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயிலில் கஞ்சா கடத்தி விற்பனை - அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி கைது
சிவகாசியில் ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ததாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ததாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




