உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

ஈரோட்டில் 6-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஈரோட்டில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக அறிவியல் ஆசிரியர் விஜய சாரதியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை ரோட்டையொட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மாணிக்கம் பாளையம் வீட்டு வசதி பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் விஜய சாரதி. இவர் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலரிடம் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாக பள்ளி தலைமை ஆசிரியை தங்கமணிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது சம்பவம் தொடர்பான விவரங்கள் தெரிய வந்தன.மேலும், இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் அடிப்படையில் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் விஜயசாரதியை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையைத் தொடர்ந்து, ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் ஈரோடு அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50