விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நத்தமேடு பகுதியில் வசிக்கும் நரிக்குறவர், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் அருந்ததியர் குடும்பத்தினர், தங்களுக்கு பட்டா வழங்கவும், சாலை வசதி ஏற்படுத்தித் தரவும் வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். நேற்று நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது நரிக்குறவர் மக்களுக்கு நிலம் ஒப்படைக்கப்பட்டு ஆவணங்கள் வழங்கப்பட்டதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். தற்போது, தாங்கள் வசிக்கும் மேடான பகுதியை நீர்ப்பிடிப்புப் பகுதியாக வகைப்பாடு மாற்றி, அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். தங்களது நிலத்திற்கான பட்டாவை உறுதி செய்ய வேண்டும் என்றும், குடியிருப்புப் பகுதிக்கு சாலை அமைத்துத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.
பட்டா வழங்கக் கோரி நரிக்குறவர் பழங்குடியினர் தர்ணா போராட்டம்
நத்தமேடு பகுதியில் வசிக்கும் நரிக்குறவர், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் அருந்ததியர் குடும்பத்தினர், தங்களுக்கு பட்டா வழங்கவும், சாலை வசதி ஏற்படுத்தித் தரவும் வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நத்தமேடு பகுதியில் வசிக்கும் நரிக்குறவர், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் அருந்ததியர் குடும்பத்தினர், தங்களுக்கு பட்டா வழங்கவும், சாலை வசதி ஏற்படுத்தித் தரவும் வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




