உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

திருப்பத்தூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் இரட்டைக் கொலை - இளைஞர் கைது

திருப்பத்தூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆண், பெண் இருவரை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ரஞ்சித்குமார், மாலினி ஆகிய இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், இளைஞர் சஞ்சீவ் காந்தியை கைது செய்தனர்.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
திருப்பத்தூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் இரட்டைக் கொலை - இளைஞர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அடுத்த வெங்கடேஸ்வரா நகரில் விற்பனைக்காக காலி வீட்டுமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நேற்று மதியம் காரில் வந்த பெண்ணும், ஆணும் மர்ம நபரால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில் உயிரிழந்தவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார், திருப்பத்தூர் மாவட்டம் முத்தம்பட்டியைச் சேர்ந்த மாலினி என்பது தெரிய வந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து, போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் திருவண்ணாமலையில் பதுங்கியிருந்த சஞ்சீவ் காந்தியை 8 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். பின்னர், விசாரணையில் மாலினியுடன் ஏற்பட்ட உறவு தொடர்பான பிரச்சினையில் கோபமடைந்து இருவரையும் கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50