திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே தாழைகுளம் விலக்கு பகுதியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர்கள் விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் தாழைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்களிடமிருந்து 70 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இருவரையும் கைது செய்து அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, இவர்களுக்கு குட்கா புகையிலைப் பொருட்களை விநியோகம் செய்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு எதிராக போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் 70 கிலோ குட்கா பறிமுதல் – இருவர் கைது
திருநெல்வேலி மூன்றடைப்பு பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த 70 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவரை கைது செய்து, விநியோகம் செய்தவரைத் தேடி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




