தருமபுரி மாவட்டம் காரிமங்கலம், அனுமந்தபுரம், பிக்கனஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கோவில்களில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளை சம்பவங்களுக்கு சொகுசு கார் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து காரிமங்கலத்தில் சந்தேகத்திற்கிடமாக வந்த காரை சோதனையிட்ட போலீசார், தேன்கனிக் கோட்டையைச் சேர்ந்த யசோதா, ஜவளகிரியைச் சேர்ந்த வெண்ணிலா மற்றும் ஆனந்தன், சந்தோஷ்குமார் ஆகிய நான்கு பேரைக் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஒன்றரை சவரன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் பணம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஐந்து வீடுகளில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் நால்வரையும் போலீசார் கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தனர்.
தருமபுரியில் காரில் தொடர் கொள்ளையடித்த 4 பேர் கைது - நகைகள், ரூ.40 ஆயிரம் பணம் பறிமுதல்
தருமபுரியில் சொகுசு காரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதாக 2 கல்லூரி மாணவிகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் சொகுசு காரில் சென்று வீடுகள், கோவில்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதாக 2 கல்லூரி மாணவிகள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




