உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

சென்னை பேருந்து நிலையத்தில் நடத்துநருக்கு அரிவாள் வெட்டு - இருவர் கைது

சென்னை கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தில் முன்விரோதம் காரணமாக நடத்துநரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தில் முன்விரோதம் காரணமாக அரசு பேருந்து தற்காலிக நடத்துநரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:
சென்னை பேருந்து நிலையத்தில் நடத்துநருக்கு அரிவாள் வெட்டு - இருவர் கைது

சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து தற்காலிக நடத்துநரை மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில், தற்காலிக நடத்துநர் நித்தியநாதன் படுகாயமடைந்தார். தேவர் ஜெயந்தியின் போது அவரது நண்பருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த முன்விரோதம் காரணமாக, நண்பருக்குப் பதிலாக நடத்துநர் நித்தியநாதனை அந்தக் கும்பல் தாக்கியுள்ளனர். பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் பயணிகள் முன்னிலையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. இதனைப் பார்த்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, படுகாயமடைந்த நடத்துநர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர், தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதை தொடர்ந்து, நடத்துநர் அளித்த புகாரின் பேரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களைப் பிடிக்க போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50