தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொழில்பேட்டை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில், ஆட்டோவை ஓட்டி வந்தவர் கோவில்பட்டி லிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் முருகராஜ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 37 கிலோ 500 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டியில் 37.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் – வாலிபர் கைது
கோவில்பட்டியில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 37.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொழில்பேட்டை அருகே ஆட்டோவில் கடத்தப்பட்ட 37.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முருகராஜ் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




