உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

காரில் கஞ்சா, 60 மதுபாட்டில்கள் கடத்தல் - ஒருவர் கைது

போரூர் பகுதியில் காரில் கஞ்சா, 60 மதுபாட்டில்கள் கடத்திய சினிமா பின்னணி நடனக் கலைஞரை போலீசார் கைது செய்து போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் வாகன சோதனையின் போது காரில் கஞ்சா, 60 மதுபாட்டில்கள் கடத்திய சினிமா பின்னணி நடனக் கலைஞர் சாய்கிரணை போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
காரில் கஞ்சா, 60 மதுபாட்டில்கள் கடத்தல் - ஒருவர் கைது

சென்னை போரூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரில் கஞ்சா மற்றும் 60 மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காரில் வந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.அந்த விசாரணையில், அவர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சாய்கிரண் என்பதும், சினிமா துறையில் பின்னணி நடனக் கலைஞராகப் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, போதிய வருமானம் இல்லாததால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். மேலும், பெங்களூருவில் தனது நண்பரை இறக்கி விட்டுத் திரும்பும் போது வெளிமாநில மதுபாட்டில்களை வாங்கி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சாய்கிரணின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 2 கிலோ கஞ்சா, மதுபாட்டில்கள் மற்றும் மெத்தம் பெட்டமைன் போதைப் பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து, கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50