செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் செயல்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த மையூர் சாகீக் என்ற இளைஞர், பிளாஸ்டிக் டப்பாவில் பாம்பு ஒன்று அடைத்துக்கொண்டு எடுத்து வந்தார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் விசாரித்த போது, குன்றத்தூர் கிருகம்பாக்கம் பகுதியில் தங்கி வேலை பார்த்து வருவதாக தெரிவித்த மையூர் சாகீக், தன்னை பாம்பு கடித்து விட்டதாகவும், அந்த பாம்பின் எந்த வகை என தெரியாத காரணத்தால், அதனையும் சேர்த்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து எடுத்து வந்ததாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, பாம்பின் வகை குறித்து கண்டறிந்த மருத்துவர்கள், அது தண்ணீர் பாம்பு என்றும், உரிய சிகிச்சை அளிக்கப்பட்டால் உடல் பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவித்தனர். தன்னை கடித்த பாம்பை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து எடுத்து வந்த இளைஞரால் சிறிது நேரம் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த இளைஞரால் பரபரப்பு
தாம்பரத்தில் தன்னைக் கடித்த பாம்பை, பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து எடுத்து வந்த இளைஞர்
தாம்பரம் அரசு மருத்துவமனையில் தன்னைக் கடித்த பாம்பை, பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து எடுத்து வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
Visil Administrator
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

